கள்ளக்குறிச்சியில் மலைத் தேனீ கொட்டி சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் நேற்று மலாய் 6 மணியளவில் கூத்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன்பு நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு கோவிலை ஒட்டியுள்ள அரச மரத்தில் மழை தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் சிலர் அந்த தேன் கூட்டை அழிக்கும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டியது.
அதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வீராசாமி மீதும் தேனீக்கள் கொட்டியது. உடனடியாக வீராசாமி மட்டுமல்லாது தேனீக்கள் கொட்டி காயமடைந்த பத்துக்கு மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வீராசாமி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.