The Bahubali rocket took off
இந்தியாவின் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்விஎம்3 ( LVM3) என்ற ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள் இன்று (24-12-25) விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செற்கைகோள் உதவும் என்று சொல்லப்படுகிறது. இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் எடை சுமார் 6,100 கிலோ ஆகும். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us