ops Photograph: (admk)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இன்றைய தினம் நம்முடைய தென் தமிழகத்தினுடைய குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் தெய்வமாக நின்ற தெய்வ திருமகன் பென்னிகுவிக் அவர்கள் முல்லைப் பெரியாற்றில் ஒரு நம்முடைய தேனி மாவட்டத்தின் மலைப்பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரையில் இருக்கும் மக்களுக்கு தாகம் தீர்ப்பதற்கும், இந்த பகுதி விவசாய பூமியாக உருமாறி விவசாய பெருங்குடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதற்கும் பென்னிகுவிக் செய்த தியாகம் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதை இந்த நல்ல நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
பென்னிகுவிக் அவர்களுக்கு இந்த பகுதி மக்களுக்கு ஆற்றிய அருந்தொண்டை பாராட்டி ஜெயலலிதா அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு ஒரு மிகப்பெரிய மணிமண்டபத்தை இங்கு நிறுவினார்கள், தேனி மாநகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு பென்னிகுவிக் பெயரைச் சூட்டினார்கள், நினைவைப் போற்றுகின்ற வகையில் மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினார்கள் என்பதையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணைக்கட்டு மொத்த உயரம் 152 அடி என்ற நிலையில் தான் பென்னி குவிக் இந்த அணையைக் கட்டி முடித்தார்கள். திமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக அதனுடைய உயரத்தினை 136 அடியாக நிலை நிறுத்தினார்கள். ஜெயலலிதா அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் உடைய அனைத்து பராமரிப்பு பணிகளையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்து முடித்தார்கள் என்பதை நான் இங்கே நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். அதிமுக ஆட்சியில் அந்த அணையை மீண்டும் பலப்படுத்தியதன் விளைவாக இந்த அணை எந்த நிலையிலும், பூகம்பம் ஏற்பட்டாலும் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாது என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கித் தந்தார்கள் என்பதனை இந்த நல்ல நேரத்தில் நான் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னீர்களே? என்ற கேள்விக்கு, ''இன்னைக்கு தான் தை பிறந்திருக்கிறது. நல்ல வழி பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதத்தில் இன்னும் 30 நாளும் இருக்கிறது'' என்றார்.
'சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு. ''மக்கள் அதை முடிவு செய்வார்கள்'' என்றார்.
Follow Us