'The arrival of the medical waste plant is a shame' - Minister Raghupathi interview Photograph: (minister)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 10 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, ''முதலமைச்சர் 10 ந் தேதி புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். எஸ்ஐஆர் தேர்தல் நேரத்தில் வேண்டாம். தேர்தல் முடிந்த பிறகு செய்யலாம் என்கிறோம். இதனால் பீகார் போல உண்மையான வாக்காளர்கள் பாதிக்கப்படக்கூடாது.
கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. முடிவில் யார் குற்றவாளி என்பது தெரிய வரும். அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்துள்ளது என்கிறார்கள் அந்த ஆடியோ வீடியோ உண்மையானதா? டூப்ளிகேட்டா என்பதை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை இருக்கும். பிசானத்தூர் உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் என்று 10 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் மருத்துவக்கழிவு ஆலை வேண்டாம் என்கிறார். மக்களும் வேண்டாம் என்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகு மருத்துவக்கழிவு ஆலை வருவது கம்மி தான்'' என்றார்.
  
 Follow Us