தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இதுவரை ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்தோ அல்லது கூட்டணி நிலைப்பாடு குறித்தோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''தேசிய முற்போக்கு திராவிட கழகம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். நான் எப்போதும் சொல்வதைத்தான் தான் இப்போதும் சொல்கிறேன் எங்கள் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக, பகுதி, வட்ட, மகளிரணி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ அந்த கூட்டணி நிச்சயம் இந்த தேர்தலில் அமையும் அமையும் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

Advertisment

அந்த அறிவிப்பு வரும் பொழுது உண்மையிலேயே நீங்கள் எல்லாரும் மிகப்பெரிய சந்தோசத்தில் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். சரியான முடிவை நான் எடுத்து இருக்கிறேன். சரியான நேரத்தில் அறிவித்துள்ளார்கள் என்று நீங்கள் எல்லோரும் மிகவும் பெரிய சந்தோஷத்தில் இருப்பீர்கள். அப்படி அந்த அறிவிப்பு இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுது உங்கள் முன்னே தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார்.