'முதலில் கட்சியை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுங்கள் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு தமிழக முதல்வர் மீது புகார் சொல்லலாம்' என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார்.
Advertisment
அரியலூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''இல்லாத பொல்லாத செய்திகளை எடுத்துவிட்டால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று எண்ணிக்கொண்டு சிலர் இன்று பேசத் துணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அன்போடு நான் சொல்லிக் கொள்வது இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் பெண்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறார்கள். அதுதான் ஓரணியில் தமிழ்நாடு. நாமெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு என்று பாஜகவை வீழ்த்துவதற்கு, தமிழ்நாட்டின் மானத்தை காப்பதற்கு, தமிழ் மொழியை காண்பதற்கு ,தமிழ் இனத்தின் மானத்தை காப்பதற்கு திரண்டு இருக்கின்றோம்.
அதிமுக எங்கே திரண்டு இருக்கிறது? பாஜக அணியில் அதிமுக திரண்டுள்ளது. முதல் நாள் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை பார்க்கிறார். அதற்கு வாய் சவடால் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு பின் அவரும் டெல்லி போகிறார். அமித்ஷாவிடம் விழுந்து கும்பிடுகிறார். வெளியே வரும் பொழுது முகத்தை யாராவது பார்த்து விடுவார்கள் என்று முகமூடி போட்டுக் கொண்டு வருகிறார். அவரையும் இன்னும் போற்றி புகழ் பாடிக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.
உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வேன் இங்கே பேசிய அதிமுகவிலிருந்து விலகி இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்து ஜெயங்கொண்டத்தை சேர்ந்த தலைமை கழக தீப்பொறி ராமலிங்கம் மிகத் தெளிவாகச் சொன்னார். அதிமுகவையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் மீட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அவர்களே முதலில் எதிர்க்கட்சியாக வருவதற்கு உங்கள் கட்சியைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் முயற்சி எடுங்கள். அப்புறம் பிறகு முதல்வரை பார்த்து புகார் சொல்வதும், குறை சொல்வதும், கேலி பண்ணுவதும் செய்யலாம் என இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
Advertisment