Advertisment

முடிவுக்கு வந்த 6 ஆண்டு சட்டப் போராட்டம்!

aa

வணிகப் போட்டிக்காக ஜோ மைக்கேலுக்கு எதிராக அப்சரா ரெட்டியால் தொடரப்பட்ட வழக்கு, 6 வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

Advertisment

தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜோ மைக்கேல் ப்ரவீன் மீது 2 பிரிவுகளில் அடையார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோ மைக்கேல் ப்ரவீன் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா ஹேம்குமார், ஜோ மைக்கேல் ப்ரவீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

admk court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe