The 45th Natyanjali festival in Chidambaram
சிதம்பரம் கீழ வீதியில் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் ஏ. சம்பந்தம் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி சிதம்பரம் தெற்கு வீதியில் தொங்கி பிப்ரவரியில் 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாடகம், கதக், குச்சிப்புடி, மணிப்பூரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெறும். வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி செலுத்துகின்றனர். நாட்டியாஞ்சலியில் தேவார பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
45 ஆவது நாட்டியாஞ்சலி விழா தொடக்கத்தில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதன் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் வாழ்த்துரை வழங்கவுள்ளார். நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் மருத்துவர் ஆர்.முத்துக்குமரன், துணைத்தலைவர்கள் சக்தி ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், மருத்துவர் எஸ்.அருள்மொழிச்செல்வன், வி.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் 1981-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வந்தது. நாட்டியஞ்சிலி விழா உலக புகழ் பெற்று வந்த நிலையில் நடராஜர் கோயில் தீட்சிதர்களே நாட்டியஞ்சலியை நடத்தி கொள்கிறோம் என்று கோயிலில் நாட்டியஞ்சலி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2015-ஆம் ஆண்டு தீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து, கோயிலில் நாட்டியாஞ்சலியை நடத்தினா். இதனால், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் தெற்கு வீதியில் தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வருகின்றனா். நடராஜா் கோயிலில் தீட்சிதா்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா தீட்சிதர்களுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2022-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us