நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. நிலத்தடி நீர் வீணாவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வெளியான இந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் கூடுதல் வரி என்பதை செலுத்தப் போவதில்லை. அதற்கான எந்த ஒரு அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை. நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் தான் திட்டம் வகுக்கப்பட்டது. இதில் எந்தவொரு கூடுதல் கட்டணமும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படாது. அதற்கான எந்த நோக்கமும் ஜல்சக்தி துறை அமைச்சகத்திற்கு இல்லை. எனவே நிலத்தடி நீருக்கு வரி என வெளியான தகவல்கள் உண்மையல்ல' என மறுப்பு தெரிவித்துள்ளது.