'Thank you very much sir...' The public surrounded the Chief Minister at Central Photograph: (chennai)
தமிழக அரசு மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் 5,000 ரூபாயாக மகளிருக்கு வங்கிக்கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, திமுக மகளிர் அணியினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்ட பணத்தை, கையில் காண்பித்தபடியே பெண்கள் அறிவாலயத்தில் குழுமினர். அதுபோக, திமுகவினர் இந்த அறிவிப்பைக் கொண்டாடும் விதமாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
தேர்தலையொட்டி திமுக அரசு இப்படி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து பூத் கமிட்டி மாநாடுகளை திமுக நடத்தி வரும் நிலையில் இன்று வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால் ஜோலார்பேட்டை செல்வதற்கு இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைக்க கட்சி நிர்வாகிகள் என பலரும் வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் 5000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
Follow Us