Advertisment

“நம்முடைய முதல்வருக்கு நன்றி...” - விஜய் பேச்சு!

tj-tvk-vijay-green-speech-vanakkam

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (04.03.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டு அணிந்து கொண்டு அப்போது அவர் பேசுகையில், “ஜனநாயகன் படம்  ரிலீஸ் பிரச்சனையில் நிறையப் பேர்  குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம்முடைய முதல்வர் (மு.க. ஸ்டாலின்) அவர்கள் கூட பூசி மொழுகி பட்டும் படாமல் குரல் கொடுத்தார். ஆனால் அது எதுவாக இருந்தாலும் (பட் வாட் எவர் இட்ஸ்) குரல் கொடுத்த அவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

இப்படி நாம் வெளிப்படையாகப் பேசுவதினால் முதல்வருடைய மனநிலை இப்போது எப்படி இருக்கும் தெரியுமா?. ஏற்கனவே கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தூங்க விடாமல் செய்கிறார்கள். விஜய்யும் தூங்க விடாமல் செய்கிறான். நம் பாட்டுக்கு ஹைவே ரோட்டில் சைக்கிளில் தனியாகச் செல்லலாம் என்று  நினைத்தோம். இவன் என்னடனா மக்கள் சக்தியோடு வந்து கொண்டு இருக்கிறான். இவன்தான் கேள்வி கேட்கிறான் என்று பார்த்தால் மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான். ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தோம். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றலாம் என்று பார்த்தால் அதையும் கேள்வி கேட்க வைக்கிறான். விசில் சத்தம் வேறு விண்ணை முட்டுகிறது. 

Advertisment

கூட்டணிக் கட்சிகள் தொல்லை வேறு தாங்க முடியவில்லை. இவன் பண்ற பிரச்சாரத்தை முடக்கலாம் என்று பார்த்தால் அப்பவும் மக்கள் அவன் பின்னாடி தான் நிற்கிறார்கள். என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாத ஒரு மனநிலையில்  இருப்பார். நீங்கள் இந்த விஜய்யை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற  ஒவ்வொரு விஜய்யையும் உங்களால் முடக்கவே முடியாது. அவர்கள் எல்லாம் ஆல்ரெடி பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் பிரச்சாரத்துக்கு குடும்பம் குடும்பமாக இறங்குவார்கள் பாருங்கள். உங்களால் மட்டுமல்ல  யாராலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார். 

Thanjavur mk stalin Tamilaga Vettri Kazhagam tvk vijay tvk Tanjore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe