தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், அதிமுக- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க இடம்பெறுவதாக கடந்த 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார். அதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

Advertisment

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக-அதிமுக கூட்டணியில் இடம் பெறும் மற்ற கட்சிகளையும் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த டி.டி.வி.தினகரன்  இதில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று (19-01-26) நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற தனியரசு, அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இணைவது தொடர்பாக அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment