zoho owner

Advertisment

சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. தமிழகத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய சோஹோ நிறுவனம் மூலம் உலக அளவில் தொழில் செய்து வருகிறார்.

இவர் தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை எனும் கிராமத்தில் புதிய பள்ளியைத் தொடங்கியுள்ளார். முன்னர் வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்பு எடுத்து வந்த இவர், தற்போது இந்தப் பள்ளியைத் தொடங்கி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அதன் மூலம் கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார். இப்பள்ளிக்கான அரசு ஒப்புதல்கள் வாங்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஸ்ரீதர் வேம்பு-வும் இப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.