/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court3_630_630 (2)_2.jpg)
பப்ஜி மதனை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவரது மனைவியும், யூ-ட்யூப் சேனலின் நிர்வாகியுமான கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, கிருத்திகாவை நீதிமன்றக் காவலில் ஜூன் 30- ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கிருத்திகாவை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, யூ-ட்யூபர் பப்ஜி மதன் மீதான புகாரை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, "யூ- ட்யூப்பில் ஆபாசமாகப் பேசி பப்ஜி மதன் மாதம் ரூபாய் 7 லட்சம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. பப்ஜி மதனுக்கு சென்னையில் இரண்டு சொந்த வீடுகள், இரண்டு பிஎம்டபிள்யூ கார்களும் இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பப்ஜி மதன் ஆபாசமாக பேசும் போது எதிர் தரப்பில் பேசும் பெண்ணின் குரல் அவரது மனைவியினுடையது. பப்ஜி மதன் தனது புகைப்படங்கள் உட்பட எந்த அடையாளத்தையும் வெளிப்படுத்துவதில்லை. பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன் வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)