YOUTUBE MATHEN CHENNAI CRIME POLICE INVESTIGATION

Advertisment

ஆபாசமாகப் பேசிய யூ டியூபர் பப்ஜி மதன் மீதான புகார்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே, பப்ஜி மதன் மீது இரண்டு புகார்கள் உள்ள நிலையில், மேலும் ஒரு புகார் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைமுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே வந்த இரண்டு புகார்கள் குறித்து புளியந்தோப்பு சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில், சென்னை அருகே பெருங்களத்தூர், சேலம் ஆகிய இடங்களில் பப்ஜி மதனை தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதனிடையே, யூ டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் பெண்களை ஆபாசமாகத் திட்டுதல், தடைச் செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

பப்ஜி மதன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.