புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுநடந்தது. இதில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் வாக்குச்சாவடி மையத்திற்கு இளைஞர்கள் மாட்டு வண்டியில் வந்து வாக்களித்தனர். மேலும் மரக்கன்றுகளுடன் வந்த இளைஞர்கள் வாக்களித்துவிட்டு மரக்கன்றுகளை நட்டுச் சென்றனர். பனை மரக்காதலர்கள் என்ற அமைப்பினர் வாக்களித்த பிறகு பனை விதைகளை விதைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ktm mattu vandi.jpg)
வடகாடு பரமநகர் வாக்குச்சாவடியில் தந்தையுடன் சென்ற ஹரிதாரணி என்ற 3 வயது சிறுமி தந்தைக்கு மை வைப்பதைப் பார்த்துவிட்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து விரலில் மை வைத்துக் கொண்டு வந்து தானும் ஓட்டுப் போட்டுவிட்டு வந்ததாக காட்டி மகிழ்ந்தார்.
Follow Us