/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4113.jpg)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய நண்பன் ஸ்ரீராம், தேவேந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் இன்று காலையில் பவானி அத்தாணி பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நான்கு பேரும் மது போதையில் ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஸ்ரீதர் மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் மூழ்கியுள்ளனர். இதை கவனித்த அவரது நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளனர். உடனடியாக மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மீட்புப் படையினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடினர். இதில் ஸ்ரீதர் உடல் சடலமாகமீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் உடலை தற்போது வரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். அந்தியூர் அருகே ஆற்றில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)