Youths who disappeared into the forest with temple bills; CCTV footage goes viral

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே முருகன் கோவில் ஒன்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் உண்டியலை தூக்கிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெல்லிக்குன்றம் பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில்வைக்கப்பட்டிருந்த உண்டியல் திடீரெனக்காணாமல் போனதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, உள்ளே புகுந்த இரண்டு இளைஞர்கள் உண்டியலை தூக்கிக்கொண்டு காட்டுக்குள் தப்பிச் சென்றது தெரிய வந்தது. அண்மையில் ஆடி கிருத்திகையை ஒட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை காணிக்கையாக செலுத்திய நிலையில், உண்டியல் திருடப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.