பட்டாக்கத்தியைக் காட்டி பேருந்தை வழிமறித்த சில்வண்டுகள்; போலீசார் விசாரணை

Youths who blocked the bus with machetes; Police investigation

பேருந்தை இருசக்கர வாகனத்தில் முந்திச்சென்று பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி நிறுத்திய இளைஞர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஆலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அமர்ந்து கொண்டு அந்தத்தனியார் பேருந்தை துரத்திச் சென்றனர்.

பின்னர் பேருந்தை முந்திச் சென்ற அந்த இளைஞர்கள், கையிலிருந்த பட்டாக்கத்தியைக் காட்டி பேருந்தை நிறுத்தினர். இந்தக் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுநரைப் பார்த்து மிரட்டும் அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர்கள் குழுவில் சிலர் சிறுவர்களாகவும் இருந்தனர். இச்செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி வரும் நிலையில், பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe