பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்!

youths various demands

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) எனும் அமைப்பு இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலைகழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும்துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவப்படிப்பில்இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குஅகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது. திண்டுக்கல் சிறுமி கலைவாணி பாலியல் கொலைவழக்கை முறையான சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்ட வடமதுரை காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட குற்றவாளிக்கும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe