Youths smashing vehicles intoxicated CCTV footage released shocking!

Advertisment

தலை நிற்காத போதையில் இளைஞர்கள் சாலையில் உள்ள வாகனங்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மதிச்சியம் பகுதியில் சில இளைஞர்கள் மதுபோதையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக், ஆட்டோஉள்ளிட்ட வாகனங்களை சரமாரியாகத்தாக்கி உடைத்தனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தில் சில சிசிடிவிகேமராக்களையும்அந்த இளைஞர்கள் தாக்கியது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது ரூபன் குமார், அரிசுரேஷ், பிரபு என்பது தெரியவந்தது மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.