
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி இருசக்கர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவாலிபர்கள் இருவரிடம் காவல்துறையினர் எதேர்சையாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி, துப்பாக்கி செய்யப்படுவதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. நவீன் சக்கரவர்த்தி, சஞ்சீவ் பிரகாஷ் ஆகிய அந்த இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கி தயாரிக்க இளைஞர்களுக்கு உதவிய கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர்.
தற்பொழுது இவர்கள் சிறையில் உள்ள நிலையில், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
Follow Us