/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police33322_0.jpg)
ஏடிஎம் இயந்திரத்தைக் கள்ளச்சாவி மூலம் திறந்துகொள்ளையடிக்க முயன்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டுவருகிறது. இந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்ற வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர், கள்ளச்சாவி மூலம் இயந்திரத்தைத் திறந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இதனால் மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்குக் குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த காவல்துறையினர், ஏடிஎம் இயந்திரத்தைத் திருட முயன்ற இரண்டு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள தனியார் நிறுவன கிடங்கிற்கு சரக்குகளை இறக்கிவிட்டுச் செல்ல வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)