Advertisment

கஞ்சா கடத்திய இளைஞர்கள்; கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல்!

Youths arrested for smuggling cannabis

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரில் உள்ள மலையம்மன் கோவில் பகுதியில் கஞ்சா கடத்துவதாக தியாகதுருகம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மலையம்மன் கோவில் பகுதியில் உதவி ஆய்வாளர் ஜெயமணி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் தங்கள் பாணியில் விசாரணை செய்த போது தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ருத்தீஸ் என்பதும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெண்ணிதாமஸ் என்பதும் இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்திய விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

arrested kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe