youths arrested for misbehaved with adopted daughter

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு ராஜி (45), சிங்காரவேல் (55) என இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்களான இவர்கள் இருவரும் கிராமத்தில் வசித்துக்கொண்டு, அவ்வப்போது கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், ஆதரவற்ற ஒரு சிறுமியை அழைத்து வந்து குழந்தையிலிருந்தே அவர்கள் வீட்டில் வளர்த்துவந்துள்ளனர். அந்தச் சிறுமிக்குத் தற்போது 14 வயதாகிறது. இந்நிலையில். ராஜி, சிறுமிக்கு அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்துவந்துள்ளதாக தெரிகிறது.

Advertisment

இதற்கு சிங்காரவேலுவும் உடந்தையாக இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இருவரும் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்துவந்துள்ளனர். இதில் மனதாலும்உடலாலும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, அப்பகுதியில் உள்ள சிலரிடம் கூறியுள்ளார். இதனால் பரிதாபமடைந்த அப்பகுதியினர் 'குழந்தைகள் உதவிக்கரம்' உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நேற்று (22.08.2021) குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விருத்தாச்சலம் டி.எஸ்.பி. மோகன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோருடன் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று சிறுமியை மீட்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சிறுமிகடலூர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜி, சிங்காரவேல் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து,கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். வளர்ப்பு சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.