Youths arrested for hoarding several thousand kilos of Gutka goods

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தனிப்படை போலீஸாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் சோமனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோதிலால் (40) மற்றும் சீதாராம்(36) ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். "வட மாநிலத்திலிருந்து 1,100 கிலோ குட்கா கடத்தி வந்தோம் சோமனூர், கருமத்தம்பட்டி, அன்னூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதனை விற்பனை செய்யப் பதுக்கி வைத்திருந்தோம்" என வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பின்னர் தனிப்படை போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் ஏற்கனவே மோப்பிரிபாளையம் பகுதியில் உள்ள மேட்டுக்காடு என்ற தோட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட வழக்கில் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment