A youth who went to see Jallikattu was lose their live by a bull

தமிழ்நாட்டிலேயே அதிகம் ஜல்லிக்கட்டு நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னலூர் என்கிற திருநல்லூரில் தான் அதிகமான வாடிவாசல்கள் கொண்ட ஜல்லிக்கட்டு திடல் உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாசல்களைத்திறந்து காளைகளை வெளியே விட்ட ஊர் இது. இந்த ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள் கிழமை (12/02/2024) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டது.

Advertisment

200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் காளைகளும் காளையர்களும் வந்திருந்தனர். இதில் கந்தர்வக்கோட்டை தொகுதி கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞரை காளை தூக்கி பந்தாடிய நிலையில், காளைநெஞ்சில் குத்தியதால்பலியானார். மேலும் மாடுபிடி வீரர்கள் 19 பேர்உள்பட 79 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment