/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_47.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்.இவரது மகன் 22 வயதுசரண்ராஜ். பட்டதாரி இளைஞரான இவர் தனது நண்பர்களான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன், மணிகண்டன், சந்துரு, ஸ்ரீபதி ஆகியோருடன் நேற்று முன்தினம் சோமண்டார்குடி என்ற ஊர் அருகே கோமதி ஆற்றில் வலை போட்டு மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கவில்லை. அதனால்நண்பர்களுடன் வீட்டுக்குக் கிளம்பத்தயாராக இருந்தனர்.
அந்த நேரத்தில்கல்வராயன் மலை ஒட்டியுள்ள கோமுகி அணையின்உபரி நீர் 3000 கன அடி திறந்து விடப்பட்டது.இவர்கள் ஆற்றிலிருந்து வெளியேறத்தொடங்கிய நேரத்தில் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து இருக்கிறது. இதில் அவரதுநண்பர்கள்கரையேறி விடசரண்ராஜ் மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து கரையேறியஇளைஞர்கள் கச்சராபாளையம் காவல் நிலையத்துக்குஇது குறித்து தகவல் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துஅடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சரண்ராஜை தேடினர். இதனிடையே உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினருக்குத்தகவல் அளிக்க, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில்இறங்கினர்.
இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மூன்றாவது நாளான இன்று வன்னஞ்சூர் கிராமத்தின்அருகேஇளைஞர் சரண்ராஜ் உடல்மீட்கப்பட்டது. அவரது உடலை போலீசார் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோமதி ஆற்று வெள்ளத்தில் இளைஞர்அடித்துச் செல்லப்பட்டசம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)