Advertisment

காவல்நிலையத்தில் நின்ற காரை திருடிய ஜாமீனில் வெளி வந்த இளைஞர்!

The youth who was stealing the car parked at the police station

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலையபோலீசார்கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அரியலூர்-பெரம்பலூர் சாலையில்மேலமாத்தூர்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுபுதுச்சேரியில் இருந்துமதுபாட்டில்கள்கடத்திக்கொண்டு அரியலூர் வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியிலிருந்துமதுபாட்டில்களைகடத்திக்கொண்டு வந்தமெய்யப்பன்சுதாகர்ஆகிய இருவரையும்போலீசார்கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்தடாட்டாஇன்டிகாகாரை பெரம்பலூர் நான்குரோடுஅருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுஅங்குப்பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டசுதாகர்,மெய்யப்பன்இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி காலை பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தமதுபாட்டில்கடத்தப் பயன்படுத்தப்பட்ட அந்த காரை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு காவல் நிலையபோலீஸ்இன்ஸ்பெக்டர்தமிழரசி, பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார்அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புகேமராக்களைஆய்வு செய்தனர். அதில் காரை அதன் உரிமையாளர்மெய்யப்பன்உள்ளிட்ட சிலர் சேர்ந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்துமெய்யப்பனின்செல்போன்நம்பரின்சிக்னல்செயல்பாடுகளை வைத்துபலாக்குறிச்சிபகுதியில் இருந்தஅவரையும் அவருடன் காரையும் சேர்த்துபோலீசார்கைது செய்தனர்.கார்திருடுவதற்கு உடந்தையாக இருந்த மற்ற மூன்று பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும்போலீசார்தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Theft police Perambalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe