Advertisment

போக்சோ வழக்கில் ஆஜராக இருந்த இளைஞர் கொலை; திருப்பத்தூரில் பரபரப்பு

nn

திருப்பத்தூரில் தங்கையைக் காதலித்த இளைஞரை அண்ணனே நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் தும்பேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ஜமான்கொள்ளை பகுதியைச் சேர்ந்த முரளி என்ற இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிறுமியின் வீட்டிலும் சிறுமியின் அண்ணனும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சிறுமியுடன் முரளி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியைத்திருமணம் செய்து கொள்ளவும் முரளி முயன்றுள்ளார்.

Advertisment

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்பலூர் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். புகாரை விசாரித்த போலீசார் முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியை முரளியிடமிருந்து மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்தும் முரளி சிறுமியுடன் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து முரளியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அம்பலூர் போலீசார், கொலையில் ஈடுபட்ட சந்தோஷ் மற்றும் அவர்களது நண்பர்களைத்தேடி வருகின்றனர். முரளி மீது பதியப்பட்ட போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe