Youth passes away who traveled in foot board

Advertisment

திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் துவாக்குடி நோக்கி சென்றுள்ளது. பேருந்தைஅரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த மகேஸ்வரன் (32) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கண்டக்டராக கரூர் குளித்தலை தோகமலையைச் சேர்ந்த அருண்குமார் (42) என்பவர் இருந்துள்ளார்.

அந்தப் பஸ்சில் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவரும், திருவெறும்பூரில் உள்ள கம்பெனியில் வெல்டிங் பயிற்சி மேற்கொண்டுவந்தவருமான ஹரிஹரன் (22) ஏறியுள்ளார். கூட்ட மிகுதியால் அவர் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றுள்ளார். திருச்சி - சென்னை பைபாஸ் ரோடு, செந்தண்ணீர்புரம் திருவள்ளுவர் நகர் அருகே பஸ் சென்றபோது சடன் பிரேக் போடப்பட்டது.

இதில் நிலைதடுமாறிய ஹரிஹரன், ஃபுட் போர்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், டிரைவர் மகேஸ்வரன் மற்றும் கண்டக்டர் அருண்குமார் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.