Youth who took video of women bathing; Brutal attack on those who cheated

Advertisment

வேடசந்தூர் அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர். தட்டிக் கேட்டவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகத்தாக்கிய வீடியோ காட்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தட்டாரப்பட்டி எனும் கிராமம். இக்கிராமத்தில் இரண்டு இளம்பெண்கள் வீட்டுக்கு அருகிலிருந்த சின்டக்ஸ் டேங்கில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பெண்கள் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். பெண்களின் உறவினர்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த இளைஞர் தப்பி அவரது ஊரான மாரம்பாடிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அந்த பகுதிக்கு வந்த அந்த இளைஞர், விறகு கட்டையால் அங்கிருந்த பெண்கள் மற்றும் ஆண்களை கொடூரமாகத் தாக்கினார். இந்த தாக்குதலில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் என மொத்தம் 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் அவருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.