Advertisment

90 அடி கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்; போராடி மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை ஆலாந்துரை அருகே நீர் வற்றிய 90 அடி ஆழகிணற்றில் தவறி விழுந்த வாலிபரை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர்பத்திரமாக மீட்டனர்.

Advertisment

 A youth who slipped into a 90-foot well; Rescue Fire Department

கோவை ஆலந்துரை அடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில், மணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறு ஒன்றுஉள்ளது. நீர் இல்லாத வற்றிய இந்த கிணற்றின் அருகே அதேபகுதியை சேர்ந்தஅண்ணாமலை என்ற 19 வயது இளைஞர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். மழை காரணமாக அங்கிருந்த மண்வழுக்கிவிட்டதில், அண்ணாமலை அந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கும், காருன்யா நகர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த ரவிச்சந்திரன் தலைமையிலான 9 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 90 அடி ஆழம்உள்ள கிணற்றில் இறங்கி, அண்ணாமலையை கயிற்றில் கட்டி வெளியே எடுத்தனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், லேசான காயங்களுடன் அண்ணாமலையை தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

police rescued well kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe