ADVERTISEMENT

கடன் தொல்லையை தீர்க்க வந்த இளைஞரை ஏமாற்றி நகை திருடிய மந்திரவாதி! 

03:54 PM May 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(28). திருமணமான இவர், சென்னையில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் அதிகரித்துள்ளது. அதை அடைப்பதற்காக தனது மனைவியின் தாயிடம் தனக்கு உள்ள பணம் பற்றாக்குறையைக் கூறியுள்ளார். அதற்கு ரஞ்சித்து மனைவியின் தாய், திண்டிவனம் - மயிலம் ரோட்டில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலின் அருகில் இருக்கும் மந்திரவாதியை பார்க்கச் சொல்லியிருக்கிறார் அவர்.

அதனை ஏற்று அவரும் அந்த மந்திரவாதியைச் சென்று பார்த்துள்ளார். இதற்கு பரிகாரம் செய்வதற்கு பூஜை பொருட்கள் வாங்க வேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார். உடனே ரஞ்சித் அந்த மந்திரவாதியை தனது பைக்கில் அமரவைத்து திண்டிவனம் நேரு வீதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு மந்திரவாதியை வாகனத்தின் அருகே இருக்க சொல்லியிருக்கிறார் ரஞ்சித். அப்போது, மந்திரவாதி ரஞ்சித் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் செயினையும் பரிகாரம் செய்யவேண்டும் அதற்காக கழட்டி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதன்படி தான் அணிந்திருந்த நகைகளை அந்த மந்திரவாதியிடம் கழட்டி கொடுத்துவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது, அந்த மந்திரவாதியும் ரஞ்சித்தின் வாகனமும் காணமால் போயிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சி உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த கடை அருகே இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT