Advertisment

மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த இளைஞர் கைது!

The youth who forced the students to drink alcohol was arrested!

கோப்புப்படம்

Advertisment

கரூரில் மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் சர்ச் கார்னர் பகுதியில் இரண்டு மாணவிகள் மது போதையில் இருந்ததைக் கண்ட மகளிர் போலீசார் அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 11 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் பசுபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வு எழுதுவதற்காகசென்று விட்டு தேர்வு முடிந்து தோழிகளுடன் ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு தினேஷ் என்ற இளைஞர் மது அருந்து சொல்லி வற்புறுத்தியதாகவும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாணவிகள் மூவரும் மது அருந்திய நிலையில் வாந்தி மயக்கத்துடன் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மாணவிகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்த தினேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

police incident karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe