Advertisment

மது போதையில் கீழே விழுந்த இளைஞர் உயிரிழப்பு

youth who fell down under the influence of alcohol passed away

ஈரோடு சூரம்பட்டி 2 ஆம் நம்பர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மது போதையில் கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அந்த நபர் பரிதாபமாக இறந்தார். இறந்த நபர் பெயர் அருள் ஒளி (35) என்று மட்டும் தெரியும். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது முகவரி போன்ற விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

liquor Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe