Advertisment

வலியச் சென்று வம்பிழுத்து செயின் பறிப்பு; சிசிடிவி காட்சியால் சிக்கிய இளைஞர்

Youth trapped by CCTV footage

Advertisment

ஈரோட்டில் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு தகராறின் போது தங்கச் செயினை பறித்துச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே மொபைல் கடைஒன்றில் ரகு என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை அந்த மொபைல் கடைக்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் ரகுவிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது திடீரென ரகுவின் கழுத்திலிருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர்.

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் ரகு புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பூபதியை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த குட்டைசாக்கு என்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியை தேடி வருகின்றனர்.

police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe