மாநில தி.மு.க இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை திமுகதலைமை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்க கூடிய உ.பி.கள் அங்கங்கே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.

Advertisment

Youth team post for Udayanidhi ;Sweets to the public at Dindigul

அதுபோல் திண்டுக்கல் மேற்குமாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகர கழகத்தின் சார்பில் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி தலைமையில் இளைஞரணியினர் பட்டாசு வெடித்து நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வார்டு தோறும் இனிப்புகள் வழங்கி தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

Youth team post for Udayanidhi ;Sweets to the public at Dindigul

Advertisment

இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன், நகர துணைச் செயலாளர் க.கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் அப்பாச்சாமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் பி.கே.முருகேசன், ப.பரமன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அணி அமைப்பாளர் க.திருமலைச்சாமி, வார்டு செயலாளர்கள் அ.நாட்ராயன், இரா.காளீஸ்வரன், சு.சின்னச்சாமி, த.ரமேஷ், ல.சேகர், க.ராமராஜன், மு.ஆறுமுகம், கா.தங்கவேல், து.சுப்பிரமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் ந.சதீஸ்பாபு, துணை அமைப்பாளர்கள் க.செந்தில்குமார், எ.கே.ராஜா, ர.விஜயகுமார், அன்புசெழியன், கா.நாகராஜ், நகர மாணவரணி அமைப்பாளர் ச.அருண்குமார், துணை அமைப்பாளர்கள் வி.பிரதீப், ர.கணேசன், வீ.சரவணன், இ.பிரகாஷ், நா.கண்ணன் உள்பட நகர, வார்டு கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Youth team post for Udayanidhi ;Sweets to the public at Dindigul

அதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் ஒன்றியசெயலாளர் முருகன், கூட்டுறவு சங்க தலைவரும் ரிலாக்ஸ் கணேசன் உள்பட பொறுப்பில் உள்ள உ.பி.கள் உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைஅடுத்துபொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,பட்டாசு வெடித்தும் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள உ.பி.கள் அங்கங்கே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்கள்.