jkl

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற குளத்தை மீன் வளர்ப்பதற்காக மேற் கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராக்கி என்ற ராகேஷ்குமார் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குத்தகை எடுத்த குளத்தின் அருகில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடது விலாவில் 6 பால்ரஸ் குண்டு பாய்ந்த ராகேஷ் குமாரை உடனிருந்த நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதனை செய்தபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.

Advertisment

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.விஜயகுமாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர், மோப்ப நாய் ரூபி மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக ஏஎஸ்பி அருண் கபிலன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தென்மண்டல காவல்துறைத் தலைவர் அன்பு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார். காவல்துறை விசாரணையில் தற்போது நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் அருவாள் கத்திகள் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தார். மேலும் இந்த நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சகாய ஜான்பால், ஆனந்தராஜ், இருதயராஜ் ஆகிய மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். சம்பவம் நடந்து 10 மணி நேரத்திற்குள் வழக்கு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment