Advertisment

இரவல் தர மறுத்ததால் பைக்கை கொளுத்திய இளைஞர்

youth set the vehicle on fire

Advertisment

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள சிதம்பரம் சாலை பகுதியில் வசித்து வருபவர் பஷீர் என்பவரது மகன் 23 வயது பக்ருதீன். அதே ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அடி பள்ளம் தெருவில் வசித்து வருபவர் இதயத்துல்லா என்பவரது மகன் 18 வயது உவைஸ் முகமது. இவரது வீட்டுக்கு முன்பு இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனமும், இவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரது வாகனமும் என இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விடிகாலை நேரத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இரவு நேரம் என்பதால் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிக வெளிச்சம் பரவியதை அடுத்து வீட்டிலிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு வாகனங்களும் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து போக, மற்றொரு வாகனம் பாதி அளவு எரிந்த நிலையில் அணைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து செய்துள்ளனர். பக்ருதீன் சம்பவத்தன்று விடியக் காலை மூன்று மணி அளவில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உவைஸ் முகமது வீட்டுக்குச் சென்று காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு மீண்டும் சுவர் ஏறிக் குதித்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

Advertisment

அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உவைஸ் முகமதுவிடம் இருசக்கர வாகனத்தை பக்ருதீன் இரவல் கேட்டுள்ளார். ஆனால் உவைஸ் முகமது தர மறுத்துவிட்டதால் கோபத்தில் இருவாகனங்களைக் கொளுத்தியதாக பக்ருதீன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆடு திருட்டு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பதால் உவைஸ் முகமது தனது வாகனத்தைத் தராமல் மறுத்துள்ளார் வாகனம் தர மறுத்ததற்காக அந்த வாகனத்தை இரவு நேரத்தில் சென்று தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் ஜெயங்கொண்டம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

bike police Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe