Youth sentenced to life in land surveyor case

Advertisment

சேலத்தில், நில அளவையரை அடித்துக் கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஐயனார்(47). அரசின் நில அளவைத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2015ம் ஆண்டு அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சாலையோரத்தில் சடலமாகக் கிடந்தார்.விசாரணையில் அவர், கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஐயனார், ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில்இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அந்தப் பெண்ணின் கதவை தட்டியுள்ளார். அப்போது அவருக்கும், ஐயனாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அங்கு வந்த சீலநாயக்கன்பட்டி தலைமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன்(37) மற்றும் இரண்டு பேர் ஐயனாரை கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் ஐயனாரை அவர்கள் கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சீனிவாசன், ஐயனாருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார். மற்றஇருவரையும் விடுவித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.