Youth sentence five years by salem court

Advertisment

ஆத்தூர் அருகே, 14 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி 5வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலகிருஷ்ணன் (32)கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2018ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனிடம், 'உன் தந்தை ரேடியோ கேட்டார். வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்என்று கூறி, தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதை நம்பி பாலு வீட்டுக்குச் சென்ற சிறுவனை, அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுவன்ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, ஆத்தூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் பாலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைசேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Advertisment

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளி பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி வாதாடினார்.