
உடலில் உப்புச்சத்து அதிகமானால் விரைவில் உயிரிழக்க நேரிடும் என இணையத்தில் பார்த்த தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள பசுமலை அன்னை மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30) பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது உடலில் அதிகமாக உப்புச் சத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்த விஜயகுமார் உப்புச்சத்து அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து கூகுளில் தேடியுள்ளார். அப்பொழுது உப்புச்சத்து அதிகமானால் விரைவில் உயிரிழக்க நேரிடும் என்ற தகவலை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us