Youth in road incident Announcement of Chief Minister's Funding

Advertisment

கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், மோவூர் மேற்கு கிராமம், பிரதான சாலையில் நேற்று (2-9-2023) இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கடலூர் மாவட்டம், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உயிரிழந்த சக்திவேலின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.