ADVERTISEMENT

சில மணி நேரத்தில் மீட்கப்பட்டாராம் இளம்பெண்-போலிஸ் துறையிலேயே சந்தேகம்!

10:04 AM Jun 18, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தினமும் பணிக்கு கம்பெனி பேருந்தில் போய் வருகிறார். கடந்த 16ந்தேதி ஊரில் இருந்து அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக வாலாஜா பேருந்து நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு சென்றுள்ளார். இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அவரும், உறவினரும் மாந்தாங்கள் வழியாக அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

மாந்தாங்கள் அருகே இரண்டு இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தை மறித்து அவர்களை தாக்கிவிட்டு செல்போன் மற்றும் பணம், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டதோடு, வாலாஜா அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணையும் அந்த கும்பல் கடத்திக்கொண்டு சென்றுள்ளது.

இந்த தகவல் விட்டுச்சென்ற உறவினர் மூலமாக அவரது குடும்பத்தார்க்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் வாலாஜா காவல்நிலையத்துக்கு தகவல் கூறியதாகவும், உடனடியாக களத்தில் இறங்கிய வாலாஜா போலிஸார், சில மணி நேரத்திலேயே திருத்தணியை சேர்ந்த 24 வயதான ஜாகீர்உசேன், 21 வயதான சம்சுதின் இருவரை கைது செய்தனர். அவர்கள் கடத்திய இளம்பெண்ணை மீட்டுள்ளனர். அதோடு, அவர்கள் பறித்துச்சென்ற பைக், நகை, பணத்தை மீட்டதாக வேலூர் மாவட்ட போலிஸார் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதோடு, துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டதாக வாலாஜா உதவி ஆய்வாளர் சிவங்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுபதி உட்பட 5 போலிஸாருக்கு ஜீன் 17ந்தேதி மதியம் எஸ்.பி பிரவேஷ்குமார் பாராட்டி சன்மானமும், சான்றிதழும் வழங்கியுள்ளார் என்கிறது அந்த செய்திக்குறிப்பு.

கடத்தப்பட்டதாக புகார் வந்த சில மணி நேரத்தில் அந்த இளம்பெண்ணை காவல்துறை மீட்டுள்ளது மற்றும் அதோடு, அதே வேகத்தில் மீட்பு படையில் இருந்த காவலர்கள், எஸ்.ஐக்கு பாராட்டி சன்மானம் வழங்கியுள்ளது காவல்துறையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அந்த இளம்பெண் அவ்வளவு முக்கியமானவரா என்கிற கேள்வி காவல்துறையிலேயே எழுந்து பரபரப்பாக விவாதிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT