Advertisment

யூடியூப்பில் சம்பாதிக்க ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் செய்த காரியம்! தேடிப்பிடித்து கைது செய்த போலீசார்

ஆந்திர மாநிலம்ரேணிகுண்டாவில் யூடியூப்பில்சம்பாதிக்கலாம் என்ற முடிவில்அபாயகரமான வீடியோக்களையூடியூப்பில்பதிவு செய்தால் அதன் மூலம் எளிதாக சம்பாதிக்கலாம் என்று யோசித்த இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பைக், சிக்கன் போன்றவற்றை வைத்து ரயில் அதன்மீது தாக்கி செல்லும் வீடியோ காட்சிகளை எடுத்துயூடியூப்வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

Youth on railway track to earn in YouTube!

சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா ஏற்பேடை அடுத்தசென்னூர் கிராமத்தைச் சேர்ந்த ராமி ரெட்டிஎன்பவர் பிடெக் படித்து விட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவு செய்த அவர். இதற்கென அவர் சுமார் 43 வீடியோக்களை எடுத்துள்ளார். அதில் பொம்மைகள், சிக்கன், சைக்கிள், செயின், கேஸ் சிலிண்டர்,பைக் எனபல்வேறு பொருட்களை ரயில்வே தண்டவாளத்தில் வைத்து ரயில் வரும்போது அதை இடிக்கும் விதமானவீடியோ காட்சிகளை பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Youth on railway track to earn in YouTube!

Advertisment

தகவலறிந்த ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வீடியோவில் பதிவான பைக் எண்ணைஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது இந்த வீடியோக்களை பதிவு செய்தது ராமி ரெட்டிஎன தெரியவர அவரை போலீசார் கைது செய்தனர்.

railway police Andrahpradesh Youtube
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe