Advertisment

''இத தடை பண்ணாதான் என்ன மாதிரி ஆளுங்க திருத்துவாங்க...''-வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!  

Youth posting status on WhatsApp!-police investigation

‘லட்சாதிபதி ஆக வேண்டுமா..? இப்போதே இணையுங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில்" இந்த வாசகங்களுடன் கூடிய கண்கவர் விளம்பரங்களைத் தினந்தோறும் காணாதோர் இருக்க முடியாது. சமூகவலைதளங்கள், எஸ்.எம்.எஸ்., தொலைக்காட்சி விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் பணத்தாசையைத் தூண்டும் இந்த விளம்பரங்கள் பளிச்சென கண்ணில்படும். இப்படி அனைத்து தளங்களிலும் எட்டிப்பார்க்கும் இந்த விளம்பரங்களைப் பலர் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவதுண்டு. ஆனால் சிலர், பணம் மீதான ஆசை காரணமாகவோ, தேவை காரணமாக இதனுள் சென்று சிக்கிக்கொள்வதுண்டு. ஆசைக்காக விளையாட்டாக ஆரம்பிக்கும் இது, ஒருகட்டத்தில் இதில் சிக்கியவர்களைக் கடனாளியாக்கி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்வது வரை கொண்டுவிட்டுவிடுகிறது. இப்படி இந்த சூதாட்டத்திற்கு இரையான குடும்பங்கள் ஏராளம்.

Advertisment

நேற்று கூட சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் பவானி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி அதில் ஏற்பட்ட இழப்பு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

Youth posting status on WhatsApp!-police investigation

ஐ.டி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கரூரில் ஒரு இளைஞர் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிய நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் 20 வயதான சஞ்சய். நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சஞ்சயின் உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சஞ்சய் அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ''அன்இன்ஸ்டால் பண்ணிட்டேன் பை... ஃப்ரீஃபயர் விளையாடாதீங்கடா... என் ஒன் லேக்போச்சு... டைம் வேஸ்ட்... அடிக்ட் கேம்டா இது... ஸ்கேம் பண்ணி சம்பாரிக்கிறாங்க... இத பான் பண்ணாதான்என்ன மாதிரி ஆளுங்க திருத்துவாங்க...'' என வைத்துள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆன்லைன் விளையாட்டால் மீண்டும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe