Advertisment

கிரேன் கம்பியால் பறிபோன உயிர்..! 

Youth Passes away while working in Crane

Advertisment

திருச்சி வாழைக்காய் மண்டி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள கட்டட தொழிலாளிகளுடன் சேர்ந்து திருச்சி தென்னூர் புதூர் நாடு பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள், சுமார் 70 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு தொட்டியில் நின்று கட்டடத்தில் கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனில் உள்ள கம்பி அறுந்து கீழே விழுந்ததில் இரும்பு தொட்டியில் இருந்து இருவரும் படுகாயமடைந்தனர். இதில் அவர்களுக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வகுமார் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்துள்ள சரவணகுமாருக்கு முதலுதவி அளித்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சரவணகுமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். உயிரிழந்த செல்வகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe