Advertisment

முகநூலில் ரீல்ஸ் பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

Youth passes away in vellore who post RIP Status in FB

Advertisment

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் நவீன் குமார் (20). இவர், பாலிடெக்னிக் முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.

இவர், இன்று (17ம் தேதி) காலை தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும் இன்றைய தேதியிட்டு RIP எனரீல்ஸ் செய்து அதையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார், நவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe