Youth passes away in trichy police investigating

Advertisment

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராசு (21). இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.இந்நிலையில் இன்று (16.09.2021), பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு நடந்துசென்றுகொண்டிருந்தபோது, ஓட ஓட வெட்டி, தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டு கடை வீதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பிறகு தகவலறிந்து அங்கு வந்த பொன்மலை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அதில் பொன்மலை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (24) என்பவருக்கும் சின்ராசுவுக்கும் இடையே இருந்துவந்த முன்விரோதத்தால் வெட்டிக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.காவல்துறையினர் கொலைசம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.